தீயில் கருகிய தந்தை, மகள், மகனின் சடலம் மீட்பு | தினகரன்

தீயில் கருகிய தந்தை, மகள், மகனின் சடலம் மீட்பு

தீயில் கருகிய தந்தை, மகள், மகனின் சடலம் மீட்பு-Father Daughter Son Body Found Same Family

 

வீடொன்றின் அறையிலிருந்து தீயில் கருகிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

மெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஜவெல்ல 02, ரம்படவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறையிலிருந்தே இவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தீயில் கருகிய நிலையில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படும் மூவரின் சடலங்கள் குறித்து இன்று (10) காலை 7.30 மணியளவில், பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிசார் குறித்த சடலங்களை மீட்டுள்ளனர்.

மரணமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்திக புஷ்பகுமார (36), துல்மி நவங்கனா (13), திலேஷன கயான் (05) ஆகிய மூவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெல்தெனிய நீதவானினால் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மெணிக்ஹின்ன பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...