Wednesday, April 11, 2018 - 11:53
சுகாதார அமைச்சர் ராஜிதவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
ஏற்கனவே உள்ள 80% எச்சரிக்கை படத்திற்கு மேலதிகமாக புகைத்தலை மேலும் குறைக்கும் நோக்கில் புகையிலை சார் உற்பத்திகளை கவர்ச்சியற்ற பொதிகளில் பொதியிடுவதற்கு நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது (11) இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்தார்.
அதற்கமைய ஏற்கனவே உள்ள 80 சதவீத எச்சரிக்கை படத்திற்கு மேலதிகமாக கவர்ச்சியற்ற சிகரட் பைக்கற்றுகளில் புகையிலைசார் உற்பத்திகளை பொதியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Add new comment