கிண்ணியா பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசம் | தினகரன்

கிண்ணியா பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசம்

 

உள்ளூராட்சி மன்ற தேர்தலினை முன்னிட்டு கிண்ணியா பிரதேச  சபையின் இன்று (11) நடைபெற்ற முதலாவது சபை அமர்வில் நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த கே.எம். நிஹார் தவிசாளராக தெரிவு செய்யப்படடார்.

கிண்ணியா பிரதேச  சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில் 
இரண்டாம் கட்டமாக வாக்கெடுப்பின்றி ஏகமானதாக, பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஏ.எச்.எம். அப்துல் பாஸித் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வாக்கெடுப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தவிசாளர் தெரிவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

குறிப்பாக இச்சபையில் மொத்தமாக 15 உறுப்பினர்கள் கொண்ட தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட பிரநிதிகளுடன் இச்சபை இயங்கவுள்ளது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃரூப், இம்ரான் மஃரூப், எம்.எஸ். தௌபீக், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(திருமலை மாவட்ட விசேட நிருபர்)
 


Add new comment

Or log in with...