சதோச முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

சதோச முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

 

சதொச பல்பொருள் அங்காடி விற்பனை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெனாண்டோவுக்கு எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (06) நாட்டிலிருந்து செல்ல முற்பட்ட வேளையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஆட்சியின் போது, 2014 ஆம் ஆண்டு மஹிந்தானந்த அலுத்கமகே விளையாட்டு அமைச்சராக இருந்த வேளையில் ரூபா 39 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, கரம் பலகை, தாம் பலகை உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை கொள்வனவு செய்த குற்றம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை கைதான அவர், கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் (09) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, இன்றைய தினம் (12) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...