நக்கில்ஸ் பகுதியில் காணாமல் போன 07 பேரும் மீட்பு | தினகரன்


நக்கில்ஸ் பகுதியில் காணாமல் போன 07 பேரும் மீட்பு

நக்கில்ஸ் பகுதியில் காணாமல் போன 07 பேரும் மீட்பு-Knuckles-Missing 7 Found

 

நக்கில்ஸ் மலை பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில் காணாமல் போன 07 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06) வீட்டிலிருந்து புறப்பட்டு நக்கிள்ஸ் பகுதிக்கு சென்று, நேற்று (08) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பம்பர எல்லை காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.

பன்வில பொலிஸ் குழுவுடன், ரங்கல, லக்கல, இரத்தோட்டை பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த  பொலிசார் இணைந்து, மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பாடல் இல்லாமல் போனதை அடுத்து, அவர்கள் இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...