நாட்டின் பல பகுதிகளிலும் மழை | தினகரன்

நாட்டின் பல பகுதிகளிலும் மழை

நாட்டின் பல பகுதிகளிலும் மழை-வானிலை-வளிமண்டலவியல் திணைக்களம்-Weather Forecast-Rain-Rainfall Meteorology

 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று (08) காலை 8.30 மணி முதல் இன்று (09) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில், ஊவா மாகாணம் மற்றும்  மட்டக்களப்பு, காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் பாரிய மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அம்பாறை, மாத்தளை, கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஓரளவான மழை பெய்துள்ளதோடு, வட பகுதி தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளமை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகூடுதலாக 62 மில்லி மீற்றர் (6.2cm)  மழை வீழ்ச்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் ருகம் பகுதியில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் (10 cm) வரையான பாரிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அம்பாந்தோட்டை முதல் யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வரையான கடல் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் இருக்கும் எனவும் இடியுடன் கூடிய மழையின் போது கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...