நக்கில்ஸ் சென்ற 07 பேரை தேடும் பணி தொடர்கிறது | தினகரன்


நக்கில்ஸ் சென்ற 07 பேரை தேடும் பணி தொடர்கிறது

நக்கில்ஸ் சென்ற 07 பேரை தேடும் பணி தொடர்கிறது-7 Missing at Knuckles Mountains Area

 

நக்கில்ஸ் மலை பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற 07 பேரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (06) வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதோடு, நேற்று (08) அவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது வீட்டிலுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, பன்வில பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பன்வில பொலிஸ் குழுவொன்று அவ்விடத்திற்கு சென்றுள்ளதோடு, ரங்கல, லக்கல, இரத்தோட்டை பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து, காணாமல் போன்ற குறித்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...