Home » கிரிக்கெட் மீதான தடையை நீக்க சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்படும்

கிரிக்கெட் மீதான தடையை நீக்க சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்படும்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

by damith
November 13, 2023 7:00 am 0 comment

இலங்கை கிரிக்கெட் சபை மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையை நீக்குவதற்கு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சாத்தியமான நடவடிக்கைகள் சகலதும் எடுக்கப்படுமென, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட், மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுக்கொள்றான்.

இந்நிலையில், இதனை தேசிய பிரச்சினையாக கருதி இலங்கை கிரிக்கெட் சபையில் ஊழலை இல்லாதொழிப்பது அவசியம்.இந்நோக்கில், பாரபாளுமன்றத்தில் சகல கட்சிகளும், உறுப்பினர்களும் இணைந்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். இது அரசியல் தலையீடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையில் கிரிக்கெட்டுக்கு தடை விதித்ததாக “கிரிக்இன்போ” இணையத்தளம் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT