தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் மலிக் சமரவிக்ரம | தினகரன்

தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் மலிக் சமரவிக்ரம

தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார் மலிக் சமரவிக்ரம-Malik Samarawickrama Resigned

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தான் தவிசாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்சி மறுசீரமைப்புப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் தான் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.தே.கவின் மறுசீரமைப்புகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ருவன் விஜேவர்தன தலைமையிலான குழு, அனைத்து பதவிகளும் மாற்றப்படவேண்டும் என்று ஏற்கனவே பரிந்துரைத்திருந்மை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...