கைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு | தினகரன்

கைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு

கைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு-Mahindananda Aluthgamage's Petition Against Arresting FCID Rejected

 

தன்னை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) கைது செய்வதை தடுக்கும் வகையிலான கோரிக்கையை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல்செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படும் நிலையில், அவரைக் கைது செய்ய பொலிசாருக்கு அனுமதி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, ரூபா 5 கோடி நிதியைப் பயன்படுத்தி, பாடசாலைகளுக்கென விளையாட்டு உபகரணங்களை பெற்று, அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கம தொடர்பில் FCID யினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 


Add new comment

Or log in with...