Home » Global Innovation Challenge இற்கு நிதியுதவி பெறும் அமைப்புகளின் விபரங்களை அறிவித்த Citi Foundation

Global Innovation Challenge இற்கு நிதியுதவி பெறும் அமைப்புகளின் விபரங்களை அறிவித்த Citi Foundation

by Rizwan Segu Mohideen
November 10, 2023 11:18 am 0 comment

முதற்தடவையாக Global Innovation Challenge என்ற பெயரில் நடத்தப்படும் உலக புதுமைப் படைப்பு சவாலுக்காக நிதியுதவி பெறும் அமைப்புக்களின் விபரங்களை Citi Foundation அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் குறைந்த வருமானம் பெறும் சமூகங்கள் எதிர்கொள்ளக்கூடிய சமூக பொருளாதார சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கும் சமுதாய ஸ்தாபனங்கள் இனங்காணப்பட்டு, அவற்றுக்கு கொடையுதவி செய்யும் முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில், Citi Foundation இன் நன்கொடையாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) 50,000 அமெ. டொலர் நிதியுதவியைப் பெற்றது. இதன்மூலம், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தை அறிமுகப்படுத்தி, சகலதையும் உள்ளடக்கிய நிதி உற்பத்திகள் மற்றும் சேவைகளை பெறக்கூடிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கையில் சிறிய அளவில் விவசாயம் செய்யும் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்படும். இந்த வேலைத்திட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தித் திறனையும், சமுதாயத்தின் மீண்டெழும் திறனையும் விருத்தி செய்யக்கூடிய சுற்றாடல்-நேய விவசாய தொழில்நுட்பங்கள் போதிக்கப்படவுள்ளன.

UNDP Sri Lanka அடங்கலாக நிதியுதவி பெறும் ஐம்பது நிறுவனங்களும் முன்னுரிமை அளிக்கப்பட்ட நான்கு துறைகளில் நிகழ்ச்சித் திட்ட உதவிகளைப் பெறவுள்ளன. அவை யாவன: உணவை அணுகுதல், உணவு கிடைக்கக்கூடிய தன்மை, கட்டுப்படியான தன்மை, சமுதாயத்தின் மீண்டெழும் திறன். இந்தப் புதுமைப் படைப்புகளில் உணவுக்கான கேள்வியையும் விநியோகத்தையும் நிவர்த்திக்கும் செயலிகளை ஆரம்பித்தல் முதற்கொண்டு புதிய தொழில்நுட்பத்தையும் நகர்ப்புற தோட்டங்களை அமைப்பதற்காக நிலைபேற்றுத்தன்மை வாய்ந்த விவசாய நடைமுறைகளையும் முன்னோடியாக அறிமுகப்படுத்தல் வரையில் பல விடயங்களும் அடங்கும்.

நன்கொடை பெற்ற நிறுவனங்கள் இரு வருட காலத்தில் இலாப நோக்கம் அற்று செயற்படும் IDEO.org என்ற இணையவெளி வடிவமைப்பு நிறுவனம் வழங்கும் வசதிகள் ஊடாக ஒரு கற்றல் சமுதாயத்தை அணுகவுள்ளன. இந்த நிறுவனங்கள் ஒரு டிஜிற்றல் தளத்தின் ஊடாகவம், திரட்டப்பட்ட அனுபவங்கள் வாயிலாகவம், ஒருங்கமைவை ஏற்படுத்தி, கற்ற பாடங்களைப் பகிர்ந்து கொண்டு, சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளன.

இது பற்றி Citi Foundation இன் இலங்கை உத்தியோகத்தர் ரவீன் பஸ்நாயக்க கருத்து வெளியிட்டார்: எமது வாடிக்கையாளர்களினதும், நாமும் ஒரு பாகமாக பிணைந்துள்ள சமுதாயத்தினதும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி நோக்கி நகர்வது Citi ஐச் சேர்ந்த எமது இலக்கு. நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக நாம் இலங்கையில் கால்பதித்த நாள் தொடக்கம் இந்த விடயம் முன்னுரிமை பெற்றிருந்தது‘. அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ‘இலங்கையின் உணவுப் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக விவசாய நடைமுறைகளை நவீனமயப்படுத்தி, நிலைபேறான நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில் இன் நன்கொடை மூலதனத்தைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்திருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம்,’ என்று கூறினார்.

UNDP Sri Lanka இற்குக் கிடைத்த உதவிகள் பற்றி அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அஸூசா குபோட்டா கருத் வெளியிடுகையில், ‘இலங்கையின் சமூக-பொருளாதார நெருக்கடியில் விவசாயத்துறை பெரும் சுமையை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய பின்புலத்தில், இந்தத் திட்டமானது, வாழ்வாதாரங்களை பன்முகப்படுத்தியும், தொழில் முயற்சியாண்மை நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியும் குறிப்பாக, பெண் தலைமைத்துவ சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை இலக்கு வைத்து துரிதமாக மீட்சி பெறுவதற்குரிய உதவிகளை வழங்குகிறது. பிராந்திய ரீதியிலும், உள்நாட்டு மட்டத்திலும் UNDP இன் நீண்டகால பங்குதாரராக Citi திகழ்கிறது. நண்பாக மற்றும் வீடுகளை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களையும், பெண்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்துவதன் ஊடாக, உணவுப் பாதுகாப்பை நோக்கிய திசையில் நாடு நகர்த்தப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கமும், ஏனைய அபிவிருத்தி பங்காளர்களும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவி செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்‘.

Citi Foundation
இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் பாடுபடுகிறது. நிதிக்கட்டமைப்பில் சகலதையும் உள்ளடக்கக்கூடிய தன்மையை விருத்தி செய்யவும், இளைஞர்களுக்காக தொழில்வாய்ப்புகளை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக துடிப்பான சமுதாயங்களைக் கட்டியெழுப்பும் அணுகுமுறைகளை மீளமைக்கவும் நாம் முதலீடு செய்கிறோம். Citi Foundation ஆனது கொடைக்கும் மேலாகஎன்ற அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்த அணுகுமுறையானது, சரியான தலைமைத்துவம் மற்றும் புதுமை படைத்தல் ஊடாக எமது பணிகளை நிறைவேற்றி, சரியான திசையின் ஊடாக செல்ல ஊவைi யினதும், அதனைச் சார்ந்தவர்களினதும் பெரும் நிபுணத்துவத்தை சரியாக பயன்படுத்தக்கூடிய ஊக்கியாக திகழ்கிறது. 

Citi Foundationஇன் Global Innovation Challenge என்ற உலக புதுமைப் படைப்பு
2023ஆம் ஆண்டு Citi Foundation ஆனது வரலாற்றில் முதற்தடவையாக உலக அளவில் யோசனகளைப் பெறுவதற்கான கோரிக்கையை (RFP) வெளியிட்டது. இதற்கு பதிலாக 80இற்கு மேற்பட்ட நாடுகளில் வேலை செய்யும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்தாபனங்கள் யோசனைகளை சமர்ப்பித்தன. Citi Foundation இன் உணவுப் பாதுகாப்பு தொடர்பான Global Innovation Challenge ஆனது, சிறு அளவில் விவசாய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் ஸ்தாபனங்களுக்கு நிதி வழங்குவதற்காக டிஜிற்றல் கொடுப்பனவுத் தீர்வுகளை உருவாக்க முகவர்களுடன் வேலை செய்தல் என்ற துறையில் Citi மன்றம் கடந்த காலத்தில் சாதித்த விடயங்களுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமையும்.

இது பற்றிய மேலதிக விபரங்களை அறியவும், உதவி பெறும் ஸ்தாபனங்களின் முழுமையான பட்டியலைப் பெறவும் citifoundation.com/challenge என்ற இணையத்தள முகவரியை நாடுங்கள்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT