தொம்பேயில் சட்டவிரோத காணி அலுவலகம் முற்றுகை | தினகரன்

தொம்பேயில் சட்டவிரோத காணி அலுவலகம் முற்றுகை

சட்ட விரோதமான முறையில் கள்ளத்தனமாக ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, மிகவும் சூட்சுமமான முறையில் மிக நீண்ட நாட்களாக நடத்திவந்த காணி அலுவலகம் ஒன்றை, தொம்பே பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

தொம்பே பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பி்ன் போது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ் அலுவலகத்திலிருந்து பெருந்தொகையான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். 

காணிப் பதிவுக் காரியாலய இறப்பர் (சீல்) முத்திரை இரண்டு, தேசிய அடையாள அட்டைகள் மூன்று, போலியாகத் தயாரிக்கப்பட்ட காணி உறுதிகள், கிராமசேவகர் சான்றிதல்கள் என்பன இதன்போது, குறித்த பெண்ணிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )


Add new comment

Or log in with...