Friday, April 19, 2024
Home » Global Student Entrepreneur Awards 2023 விருதுக்காக இலங்கையிலிருந்து விண்ணப்பம் கோரல்

Global Student Entrepreneur Awards 2023 விருதுக்காக இலங்கையிலிருந்து விண்ணப்பம் கோரல்

- விண்ணப்ப முடிவுத்திகதி 2023 நவம்பர் 30 நள்ளிரவு 12.00 மணி

by Rizwan Segu Mohideen
November 9, 2023 3:48 pm 0 comment

மாணவர்கள் மத்தியில் தொழில் முயற்சியாளர்களுக்கான பிரசித்தி பெற்ற சர்வதேச போட்டியான The Global Student Entrepreneur Awards (GSEA), மீண்டும் இலங்கையிலுள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், தமது புத்தாக்கமான தொழில் முயற்சிகளை காண்பிப்பதற்கான ஒரு சிறந்த மேடையை இளம் வணிகத் தலைவர்களுக்கு வழங்குகின்றது. இலங்கையில் GSEA 2023  நிகழ்ச்சித்திட்டமானது டேவிட் பீரிஸ் குழுமத்தின் (Entrepreneurs Organization Sri Lanka) அனுசரணையுடனும், GSEA Global (டேவிட் பீரிஸ் குழுமம் அதன் பிரதான அனுசரணையாளராக) இன் கூட்டாண்மையுடனும் நடத்தப்படுகின்றது.

நாடெங்கிலுமுள்ள அபிலாஷைமிக்க மாணவர் தொழில் முயற்சியாளர்கள் GSEA 2023 போட்டியில் பங்குபற்றுமாறு அழைக்கப்படுவதுடன், ஒத்த சிந்தனை கொண்ட சகாக்கள் அடங்கிய உலகளாவிய வலையமைப்புடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புடன், வழிகாட்டல் ஆலோசனை மற்றும் அங்கீகாரத்திற்கு இது உத்தரவாதமளிக்கின்றது.     

இந்த ஆர்வமூட்டுகின்ற பயணம் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தில் அங்கம் வகிப்பதற்காக, டேவிட் பீரிஸ் குழுமத்தால் (Entrepreneurs Organization Global) பிரசுரிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் முதற்கட்ட மீளாய்வை விண்ணப்பதாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், https://gsea.org ஊடாக அதன் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

விண்ணப்பதாரிகள் இது தொடர்பில் தமது தகைமைகளை உறுதிப்படுத்தியவுடன், தேவையான தகைமைகளை தாம் கொண்டிருப்பதாக அவர்கள் கருதினால், GSEA இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://gsea.org இன் மூலமாக அவர்கள் தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது முற்றுப்பெற்றவுடன், மேலதிக மதிப்பாய்விற்காக அனைத்து விண்ணப்பங்களையும் GSEA Sri Lanka அணி பெற்றுக்கொள்வதுடன், அந்த கணத்திலிருந்து விண்ணப்பதாரிகளின் தொழில்முயற்சிப் பயணம் ஆரம்பிக்கும். விண்ணப்பங்களுக்கான முடிவுத்திகதி 2023 நவம்பர் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி என்பது குறிப்பிடத்தக்கது.     

விண்ணப்பங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணைகள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால், விண்ணப்பதாரிகள் இலங்கையிலுள்ள பின்வரும் GSEA பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ள முடியும். ஷாலிகா (டேவிட் பீரிஸ் குழுமம்), மின்னஞ்சல்: [email protected], தொலைபேசி: +94 74 090 6590 அல்லது ரெசோன் (Entrepreneurs Organization), மின்னஞ்சல்: [email protected], தொலைபேசி: +94 76 477 7033.

இப்போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியான GSEA Sri Lanka Grand Finals நிகழ்வானது 2024 ஜனவரி 29 அன்று இடம்பெறவுள்ளதுடன், மிகவும் திறமையான மாணவர் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அவர்களது மாற்றத்திற்கு வித்திடுகின்ற தொழில் முயற்சிகளை காண்பிக்கும் உற்சாகமான நிகழ்வாக இது அமையவுள்ளது. மாபெரும் இறுதிப் போட்டி மற்றும் அது வரையான கடட்டத்தில், வளர்ந்துவரும் தொழில் முயற்சியாளர்களுக்கு மகத்தான சாதனைகளை நிலைநாட்டுவதற்கான அத்திவாரத்தை இட்டுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கும். இந்த ஆண்டு இலங்கையில் இடம்பெறும் GSEA போட்டியானது, டேவிட் பீரிஸ் குழுமம் – பிரதான அனுசரணையாளர் மற்றும் AIESEC – நெட்வேர்க் கூட்டாளர் அடங்கலாக மூலோபாயக் கூட்டாளர்களின் மனமுவந்த ஆதரவினாலேயே சாத்தியமாகியுள்ளது.     

GSEA Sri Lanka இன் தலைவரான எஷான் பீரிஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “அடுத்த தலைமுறை தொழில் முயற்சியாளர்களுக்கு வழிகாட்டலை வழங்கி, அடுத்த மட்டத்திற்கு, குறிப்பாக உலக மட்டத்திற்கும் கூடச் செல்வதற்கு தேவையான மேடையை வழங்கி அவர்களை வளர்ப்பதில் Entrepreneurs Organization Sri Lanka வின் வியத்தகு மார்க்கமாக GSEA Sri Lanka அமைந்துள்ளது. இப்போட்டிகளின் போது உலகெங்கிலுமிருந்து தமது சகாக்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தையும், தம்மையொத்த தொழில் முயற்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்புக் கிட்டுகின்றது. GSEA Global Finals போட்டிகளில் உலகின் மிகச் சிறந்த மாணவர் தொழில் முயற்சியாளர்களுக்கு எதிராகப் போட்டியிடும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டார்.     

அடுத்த தலைமுறை தொழில்முயற்சியாளர்கள் தலைவர்களை வளர்த்து, வழிகாட்டல், அங்கீகாரம் ஆகியவற்றை வழங்கி, உலகளாவிய மட்டத்தில் விலைமதிப்பற்ற தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் GSEA Sri Lanka செயற்பட்டு வருகின்றது. GSEA 2023 போட்டியில் பங்கேற்பதன் மூலமாக, மாணவர்கள் வெற்றியை விரைவுபடுத்தி, தமது தற்போதைய ஸ்தானத்திற்கு சவால்விடுத்து, தமது சமூகங்கள் மத்தியில் கணிசமான நல்விளைவுகளை ஏற்படுத்த முடியும்.     

மேலதிக விபரங்களை www.gsea.org மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT