Saturday, April 20, 2024
Home » மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித உரிமைகள் அடிப்படை அணுகு முறை தொடர்பான பயிற்சிப்பாசறை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித உரிமைகள் அடிப்படை அணுகு முறை தொடர்பான பயிற்சிப்பாசறை

by Rizwan Segu Mohideen
November 13, 2023 10:14 am 0 comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித உரிமைகள் அடிப்படை அணுகு முறை தொடர்பான பயிற்சி பாசறையில் பதவி நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான மனித உரிமை அணுகுமுறை தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த கெட்டியாராச்சி பங்கு பற்றுதலுடன் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (09) இடம் பெற்றது.

இந் நிகழ்வை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மனித உரிமை கற்கைகளுக்கான நிலையம் ஆகிய இணைந்து மேற்கொண்டிருத்து.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதேச செயலாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகல் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் சட்ட உதவியைப் பெறுவதற்கான செயல்முறை இங்கு
கலந்துரையாடப்பட்டது.

இதன் போது மொழி உரிமை, இன நல்லிணக்கம், சமத்துவம், மனித உரிமை சட்டங்கள், நடைமுறைப் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

நீதித்துறைக்கான அனுசரனை திட்டத்தினை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நாடளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP), UNICEF மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிகழ்வில் நீதிக்கான ஆதரவு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி திருமதி.சுனரா சும்சுதீன் கலந்து கொண்டதுடன் இவ் பயிற்சி நெறியின் வளவாளராக சட்டத்தரணி எம்.திருணாவுக்கரசு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT