பிரதமருக்கு எதிரான பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி | தினகரன்


பிரதமருக்கு எதிரான பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி

இலங்கை பிரதர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி-No Confidence Motion Against Sri Lankan Prime Minister Ranil Defeated by 46 Votes

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, பாராளுமன்றத்தில் அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று (04) இடம்பெற்ற வாக்களிப்பில் குறித்த பிரேரணையை எதிர்த்து, 122 வாக்குகளும், அதற்கு ஆதரவாக 76 வாக்குகளும் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இவ்வாக்கெடுப்பில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்திருந்தனர்.

இன்று (04) முற்பகல் 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான 12 மணித்தியாலங்கள் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தை அடுத்து, இரவு 9.30 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இவ்வாக்கெடுப்பில், (பிரதமருக்கு எதிராக) பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து,  ஐக்கிய தேசிய கட்சி உட்பட, த.தே.கூ., ஶ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ், அ.இ. மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சி உறுப்பினர்கள், மற்றும் டக்ளஸ் தேவானந்தா, விஜயதாச ராஜபக்‌ஷ மற்றும் ஶ்ரீ.ல.சு.க. யின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாக்கெடுப்பில், கலந்து கொள்ளாதோர்...
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, பைசர் முஸ்தபா, மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, மொஹான் லால் கிரேரு, ஶ்ரீயானி விஜேவிக்ரம, லக்ஸ்மன் செனவிரத்ன, லசந்த அளகியவன்ன, நிஷாந்த முத்துஹெட்டிகம, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஏ.எச்.எம். பௌசி, முத்து சிவலிங்கம், இந்திக பண்டாரநாயக்க உள்ளிட்டோரும், எம்.பிக்களான, ஆறுமுகம் தொண்டமான், கே.கே. மஸ்தான், அங்கஜன் இராமநாதன், அத்துரேலிய ரத்தின தேரர், மனுஷ நாணயக்கார, வீரகுமார திசாநாயக்க, மலித் ஜயதிலக, சாரதி துஷ்மந்த உள்ளிட்ட 26 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாபா, சந்திம வீரகொடி, டப்ளியூ.டி.ஜே. செனவிரத்ன மற்றும் லக்ஸ்மன் யாபா அபேவர்தன, ரி.பி. ஏக்கநாயக்க, டிலான் பெரேரா, சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, திலங்க சுமதிபால மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பிக்களான மஹிந்த ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அளகப்பெரும உள்ளிட்ட 76 பேர், பிரேரணைக்கு ஆதரவாக (பிரதமருக்கு எதிராக) வாக்களிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...