Thursday, April 25, 2024
Home » கிழக்கில் இடம்பெற்ற ஆவணநூல் அறிமுகவிழா

கிழக்கில் இடம்பெற்ற ஆவணநூல் அறிமுகவிழா

by damith
November 13, 2023 5:55 am 0 comment

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினத்தின் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் அறிமுக நிகழ்வு திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் (11.11.2023) இடம்பெற்றுள்ளது.

கிழக்கு நிலப்பரப்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான ஆவண நூலாக வெளியிடப்பட்ட இந்நூலில் கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டாக இடம்பெற்றிருக்கிறது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் தலைமையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகான கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணியும் சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட எழுத்தாளர் தேவகடாட்சமும் கலந்துகொண்டனர். இதன்போது திருகோணமலை மாவட்டம் சமகாலத்தில் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதன்காரணமாக தமிழ்மக்களின் குடிப்பரம்பலில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி தொடர்பிலும் சனத்தொகை கணக்கெடுப்பின் ஒப்பிடல்களுடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுடன் இப்போதைய சூழலையும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குமான குறைந்த பட்ச தீர்வினை பெற்றுக்கொள்ளுவதற்குமாக இளைஞர்களுக்கான அரசில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கீத பொன்கலன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT