Friday, April 19, 2024
Home » சீனா பௌண்டேசன் அமைப்பினால் சம்புநகர் மாணவருக்கு உணவுப்பொதிகள்

சீனா பௌண்டேசன் அமைப்பினால் சம்புநகர் மாணவருக்கு உணவுப்பொதிகள்

by gayan
November 11, 2023 6:00 am 0 comment

சீன நாட்டின் சீனா பௌண்டேசனின் கிராமிய அபிவிருத்தியின் கீழ் (சீ.எப்.ஆர்.டீ) இலங்கைக்கான உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் அட்டாளைச்சேனை சம்புநகர் அக்/அல்-மினா வித்தியாலய மாணவர்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் கடந்த 07.11.2023 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போசாக்கு உணவுப் பொதியை மாணவருக்கு வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.ஹம்மாத், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எம்.வாஹிட், அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜுனைதீன், சம்புநகர் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் யூ.கே.ஜுனைட், பிரதிஅதிபர் எம்.ஐ.ஹாசீம், வலயத் தலைவர் எம்.எச்.ஏ.ஹைய், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் றிஸ்னா றிஸ்வான், உறுப்பினர் எஸ்.எல்.வசீம் மற்றும் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர் கலந்து கொண்டு ஒவ்வொன்றும் தலா 4 ஆயிரம் ரூபா பெறுமதியான போசாக்கு உணவுப் பொதிகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் போசாக்கை அதிகரிப்பதற்காக இத்திட்டம் சீனா பௌண்டேசனால் செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகம்மது றியாஸ்…?

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT