Thursday, April 25, 2024
Home » அக்கரைப்பற்றில் சாரணர் பயிற்சிப் பாசறை

அக்கரைப்பற்றில் சாரணர் பயிற்சிப் பாசறை

by gayan
November 12, 2023 6:54 am 0 comment

அக்கரைப்பற்று பெப்பிள்ஸ் அகடமியின் இரு நாள் சாரணர் பயிற்சிப் பாசறை அகடமியின் தலைமைக் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

அகடமியின் தலைமை செயற்பாட்டு அதிகாரி இன்ஸாப் சரிப்டீன் தலைமையில் அதிபர் தாரீக் அஸ்ஸியின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இச்சாரணர் பயிற்சிப் பாசறையில் பல்வேறு கலை, கலாசார, விளையாட்டு, வினோத நிகழ்வுகள் நடைபெற்றன. மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி, சுயதிறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தக்கூடிய வகையிலான ஆக்கத்திறன் நிகழ்வுகள், ஆபத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழிகாட்டல் பயிற்சிகள், சுயமாக தமது காரியங்களை தாமே திறன்பட மேற்கொள்ளும் வகையிலான பயிற்சிகள், கூட்டுப்பொறுப்பையும் சமூக உணர்வையும் வலுப்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வுகள், கலையாற்றல் மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தக்கூடிய கலை நிகழ்ச்சிகள், புத்தாக்க சிந்தனையை வலுப்படுத்தக் கூடிய நுண்னறிவு நிகழ்வுகள் என்பன இங்கு நடைபெற்றன.

இந்த வகையில் பெற்றோரினதும், பார்வையாளர்களினதும் கவனத்தை ஈர்த்த இவ்விரு நாள் பயிற்சி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.றகுமத்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் எம். ஐ. உதுமாலெவ்வை, சங்கத்தின் தவிசாளரும் முன்னாள் வலயக் கல்விப்பணிப்பாளருமான யூ. எல். எம். ஹாசிம் ஆகியோரது தலைமையிலான வளவாளர்களான எம்.எச்.ஹம்மாத், எம்.எப்.றிபாஸ், பாரதி, ஐ.எல்.ஜெலீல், கடாபி, ஜெயீனுடீன், செய்னுல் ஆப்தீன் போன்ற குழுவினரால் சாரண மாணவர்களுக்கான மேற்படி நிகழ்வுகளும்,பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

எம்.எப்.றிபாஸ்…?

(பாலமுனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT