இளைஞர்களை அனைத்து துறைகளிலும் வலுப்படுத்துவதே எதிர்பார்ப்பு | தினகரன்


இளைஞர்களை அனைத்து துறைகளிலும் வலுப்படுத்துவதே எதிர்பார்ப்பு

'நல்லிணக்க யொவுன்புரய' நிகழ்வு : மார்ச் 28 - ஏப்ரல் 01

இளைஞர் யுவதிகளின் அபிப்பிராயங்கள், எதிரப்பார்ப்புக்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி செயற்பட வேண்டியது நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் முன்பாக உள்ள பாரிய பொறுப்பாகும்.

'நல்லிணக்க யொவுன்புரய' என பெயரிடப்பட்டுள்ள 'யொவுன்புரய 2018' 09 ஆவது யொவுன்புரய - தேசிய இளைஞர் முகாம் குருநாகல் மாவட்டத்திலுள்ள நிக்கவெரட்டியவிலுள்ள கால்நடை வளர்ப்பு பண்ணை வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே (28) கருத்திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரம் மற்றும் தென் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யொவுன்புரய 2018-நிக்கவெரட்டிய-குருணாகல்-Youwun Puraya 2018-Nikaweratiya-Kurunegala

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், இலங்கை இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் இருந்தும் 7,000 இளைஞர் யுவதிகள் பங்குபற்றியுள்ளதோடு, மார்ச் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, இளைஞர்கள் துடிப்புமிக்கவர்கள். எதையும் செய்ய வேண்டும் என்ற போக்கு அவர்களிடம் காணப்படும். அதனை சரியான பாதையில் கொண்டு செல்வது நாட்டிற்கும்;, அரசுக்கும் முன்பாக உள்ள முக்கியமானதும் பெறுமதியானதுமான சவாலாகும்.

யொவுன்புரய 2018-நிக்கவெரட்டிய-குருணாகல்-Youwun Puraya 2018-Nikaweratiya-Kurunegala

இலங்கையின் பிரதான அரசியல் மாற்றங்களிலும், அனைத்து தேர்தலிலும்  இளைஞர்களின் செல்வாக்கு பிரதிபலித்து இருக்கின்றது. அதனால் தேர்தல்களில் இளம் தலைமைத்துவம் தொடர்பில் நாம் கவனத்தைச் செலுத்த வேண்டும். 1971, 1987, 1989ம்  30 வருட யுத்தம் நிலவியது. இந்நாட்டின் தமிழ் ஈழ போராட்டத்தில் பெருமளவில் பாதிப்புக்குள்ளானது இளைஞர்களின் வாழ்வாகும்.

அதே போன்று கலகங்கள், ஆர்ப்பாட்டங்களை எடுத்துக் கொண்டால் அவற்றிலும் இளைஞர் தரப்பின் பங்களிப்பே அதிகமாக காணப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களில் முழு நேரமும் முன்னணி வகிப்பவர்கள் இளைஞர்களாக உள்ளனர். அதே போன்று நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், விளையாட்டுகளில் நாட்டுக்கு வெற்றியையும், பெருமையினையும் பெற்றுத் தருவது இளைஞர்களே.

யொவுன்புரய 2018-நிக்கவெரட்டிய-குருணாகல்-Youwun Puraya 2018-Nikaweratiya-Kurunegala

கடந்த பிரதேச சபைத் தேர்தலின் ஊடாக இளைஞர்கள் எதிர்காலத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

நாம் இளைஞர்களின் கருத்துக்களுக்கு இதனை விடவும் அதிகளவில் செவிசாய்த்து அவற்றைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். இளைஞர் யுவதிகளுக்கு இந்நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பு கொடுத்தல் மற்றும் பொறுப்புக்களை ஒப்படைப்பது தொடர்பில் அரசாங்கம் இதளை விடவும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் காலம் வந்திருக்கின்றது.

யொவுன்புரய 2018-நிக்கவெரட்டிய-குருணாகல்-Youwun Puraya 2018-Nikaweratiya-Kurunegala

நாட்டின் பொருளதார முன்னேற்றம் அமைந்திருப்பது இந்நாட்டின் எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கு நாம் இடும் அடித்தாளத்திலாகும். அந்த முன்னேற்றத்தை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ள   வேண்டும்.

சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும், சந்தர்ப்பங்களை வெற்றி கொள்வதற்கும் எமது இளைஞர்களின் மனோநிலை மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நாம் வழிவகுத்துக் கொடுக்க வேண்டும். அந்த யுகத்திற்கே நாம் வந்திருக்கின்றோம். அதனை நாம் செய்யாவிட்டால் எம்மால் அந்த முன்னேற்றத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் போகும்.

இளைஞர்களை அரசியல், சமூக மற்றும் கலாசாரம் உள்ளிட் அனைத்து வழிகளிலும் வலுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். இன, மத, குல, அரசியல் பேதங்களின்றி இளைஞர்கள் அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு அதற்குத் தேவையான அடித்தாளத்தை இடுவது தொடர்பில் எமது விஷேட கவனம் திரும்பியுள்ளது.

கனவு காணும் இளைஞர்களுக்கு பதிலாக கனவை நிஜமாக்கும் இளைஞர்களை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்தையும் செய்வதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

இம்முகாமில் பங்குபற்றியுள்ள இளைஞர் யுவதிகளின். ஆளுமை விருத்தி, அறிவு மேம்பாடு, அனுபவப்பகிர்வு, கலந்துரையாடல் உள்ளிட்ட சகல நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அத்தோடு கல்வி கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்முகாமில், லேக் ஹவுஸ் நிறுவனம் தங்களது அலுவலக உருவமைப்பைக் கொண்ட தொகுதியை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் ஜே.சி. அத்துவல, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் சட்டத்தரணி எரந்திக்க வெலிஅங்கே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றினார்கள்.

(நிக்கவெரட்டியவிலிருந்து மர்லின் மரிக்கார்)

 


Add new comment

Or log in with...