அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது | தினகரன்

அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது

அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது-Avant Garde Floating Armoury Scam-Ex Kernel Arrested

(UPDATE)

கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க, எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அவன் காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் தொடர்பில் இடம்பெற்ற மோசடி சம்பந்தமான விசாரணைகளின் அடிப்படையில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் அவன் காட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க திலகரத்ன எனும் சந்தேகநபரை, நேற்று (28) இரவு கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து, நேற்று (28) குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை இன்று (29) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. (1.16pm)

 


Add new comment

Or log in with...