2016 O/L பரீட்சை முடிவுகள் வெளியீடு (LIVE) | தினகரன்


2016 O/L பரீட்சை முடிவுகள் வெளியீடு (LIVE)

 
2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
 
பரீட்சை முடிவுகளை 
www.doenets.lk இணையத்தளத்தில்
 
அல்லது கீழே உள்ள கூட்டில் உங்களது சுட்டிலக்கத்தை வழங்குவதன் மூலம் இங்கே பார்வையிட முடியும்.
 
அல்லது கையடக்க தொலைபேசியின் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை SMS வழியாக அறிந்துகொள்ள EXAM இடைவெளி OL இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் தகவல் திணைக்களத்தின் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.
 
அல்லது அனைத்துவிதமான கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பரீட்சை பெறுபேறுகளை அறிய EXAMS இடைவெளி சுட்டெண்ணை டைப் செய்து 
 
7777 Dialog
8884 Mobitel
7545 Airtel
3926 Etisalat
8888 Hutch
 
மேற்குறிப்பிட்ட வலையமைப்புகளின்  இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பெறலாம்.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த. உயர்தர பரீட்சையில் பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்டம் ஆகிய பிரிவின் கீழ், சுமார் ஏழு இலட்சம் மாணவர்கள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, குறித்த பரீட்சைகளின் மீள்திருத்தத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரலம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
 
 
 

 


Add new comment

Or log in with...