தலவாக்கலை - நாவலப்பிட்டி வீதியில் விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் | தினகரன்

தலவாக்கலை - நாவலப்பிட்டி வீதியில் விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்

தலவாக்கலை - நாவலப்பிட்டி வீதியில் விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்-Talawakelle-Nawalapitiya-Bus-Accident-20-Hospitalised

 

  • 20 பேரில் ஐவர் நுவரேலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம்
  • பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று (26) மாலை 5.00 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அனுமதிக்கப்பட்டவர்களில் 03 பெண்கள் மற்றும் 02 ஆண்கள் உள்ளிட்ட 05 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாவலப்பிட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதினால் நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக, பஸ்ஸை கட்டுபடுத்த முடியாமல் போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இடம்பெற்று வருகின்றன.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...