ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைமை பதவி பதட்டத்திற்கு மத்தியில் இ.தொ.க. வசம் | தினகரன்

ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைமை பதவி பதட்டத்திற்கு மத்தியில் இ.தொ.க. வசம்

ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைமை பதவி பதட்டத்திற்கு மத்தியில் இ.தொ.க. வசம்-

  • குலுக்கல் மூலம் இ.தொ.க.விலிருந்து தலைவர் தெரிவு
  • உப தலைவர் ஐ.தே.க. விலிருந்து தெரிவு

பதட்டத்திற்கு மத்தியில் இடம்பெற்ற ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைவர் தெரிவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் சடையன் பாலச்சந்திரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சபையின் உப தலைவராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜே. பாமிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஹட்டன் - டிக்கோயா நகரசபை சார்பில் ஐக்கிய தேசிய கட்சி 07 ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 06 ஆசனங்களையும் பெற்றதோடு, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 02 ஆசனங்களையும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 01 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தது.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைமை பதவி பதட்டத்திற்கு மத்தியில் இ.தொ.க. வசம்-Hatton-Dickoya Urban Council Chairman to CWC-Selection Under Tense Situation

இன்றைய தினம் (26) ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கிடையில் இடம்பெற்ற சபையின் தலைவரை தெரிவு செய்யும் வாக்களிப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் சடையன் பாலச்சந்திரன் தலைவராகவும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான ஜே. பாமிஸ் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்னர்.

சபைத் தலைவர் போட்டியில் ஐ.தே.க. சார்பில் அழகமுத்து நந்தகுமாரும், இ.தொ.கா. சார்பில் சடையன் பாலச்சந்திரனும்; உப தலைவர் போட்டியில் ஐ.தே.க. சார்பில் ஜே. பாமிஸ் மற்றும் இ.தொ.கா சார்பில் குமார கருணசிறி ஆகியோரும் போட்டியிட்டனர்.

விசேட ஆணையாளர் H.M.M.B. ஹேரத் தலைமையில் நடைபெற்ற சபைத்தலைவரை தெரிவு செய்யும் வாக்களிப்பின் போது, சபைக்கு தெரிவான 16 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைமை பதவி பதட்டத்திற்கு மத்தியில் இ.தொ.க. வசம்-Hatton-Dickoya Urban Council Chairman to CWC-Selection Under Tense Situation

இதன் போது தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட, செந்தில்ராஜ் சிவதர்ஷினி ஐ.தே.க. உறுப்பினர் நந்தகுமாரிற்கு வாக்களித்த நிலையில் ஐ.தே.க.வுக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் குறித்த பெண் உறுப்பினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பதட்ட நிலை தோன்றியது. இதன்போது "நான் எனது அறிவைக் கொண்டே வாக்களித்துள்ளேன்" என அப்பெண் உறுப்பினர் ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைமை பதவி பதட்டத்திற்கு மத்தியில் இ.தொ.க. வசம்-Hatton-Dickoya Urban Council Chairman to CWC-Selection Under Tense Situation

மொட்டு சின்னத்தின் மற்றைய உறுப்பினர் இ.தொ.காவுக்கு வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மோகன் சுப்பிரமணியம், இ.தொ.க. விற்கும் வாக்களித்த நிலையில், வேட்பாளர் இருவருக்கும் தலா 08 இற்கு 08 எனும் வாக்குச் சமனிலை ஏற்பட்ட நிலையில் சபையில் பதட்ட நிலை தோன்றியது.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைமை பதவி பதட்டத்திற்கு மத்தியில் இ.தொ.க. வசம்-Hatton-Dickoya Urban Council Chairman to CWC-Selection Under Tense Situation

இதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விசேட ஆணையாளரால் பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை தலைமை பதவி பதட்டத்திற்கு மத்தியில் இ.தொ.க. வசம்-Hatton-Dickoya Urban Council Chairman to CWC-Selection Under Tense Situation

அதன் பின்னர் குலுக்கல் முறையில் தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு.இராமச்சந்திரன்)
 
Add new comment

Or log in with...