Friday, March 29, 2024
Home » ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் போட்டி: றோயல், ஆவே மரியா முதலிடங்கள்

ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் போட்டி: றோயல், ஆவே மரியா முதலிடங்கள்

by gayan
November 12, 2023 12:42 pm 0 comment

ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட பாடசாலை மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாஸ மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இலங்கையின் முதல்தர சொக்லட் நாமமான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பரி இந்நிகழ்வுக்கு பெருமைக்குரிய அனுசரணையாளராக திகழ்ந்தது. பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளில் இந்தநிகழ்வு மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில், 2000 இளம் மெய்வல்லுநர்கள் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பல்வேறு வயதுப்பிரிவுகளில் பங்கேற்றிருந்தனர்.

சம்பியன்ஷிப் வெற்றியாளர்களாக ஆண்கள் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி அணி 44 புள்ளிகளுடன் முதலிடத்தையும், கண்டி திரித்துவக் கல்லூரி அணி 42.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. பெண்கள் பிரிவில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியர் மட அணி 83 புள்ளிகளுடன் முதலிடத்தையும், வத்தளை லைசியம் அணி 57 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றன.

பரி.தோமாவின் கனிஷ்ட கல்லூரியின் எஸ். பிரிபாசித், உயரம் பாய்தலில் 1.90 அடி பாய்ந்து சிறந்த வீரராகவும், வத்தளை லைசியம் பி.ஆர். ஏ.டி. நெத்சரா நீளம்பாய்தலில் 5.64 அடி பாய்ந்த சிறந்த வீராங்கனையாகவும் தெரிவாகினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT