மாலைதீவில் 45 நாள் அவசர நிலை நீக்கம் | தினகரன்

மாலைதீவில் 45 நாள் அவசர நிலை நீக்கம்

மாலைதீவில் 45 நாள் அவசர நிலை நீக்கம்-Maldives-Emergency-Lifted

 

மாலைதீவில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடை செய்யும் வகையில் போடப்பட்ட அவசரகால நிலையை 45 நாட்களின் பின் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் நேற்று நீக்கியுள்ளார்.  

நான்கு எதிர்க்கட்சி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை அகற்றி அவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 15 நாட்களின் பின்னரே கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி மாலைதீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

இந்த அவசரகால நிலையின் கீழ் பாதுகாப்பு படை முன்னாள் ஜனாதிபதி மெளமூன் அப்துல் கையூம் மற்றும் இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதித்துறையின் உயர் அதிகாரி ஒருவரை கைது செய்தது. இந்த நால்வர் மீதும் கடந்த புதன்கிழமை தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.     

 


Add new comment

Or log in with...