பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்த ஐவரில் ஒருவர் பலி | தினகரன்

பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்த ஐவரில் ஒருவர் பலி

பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்த ஐவரில் ஒருவர் பலி-Kinniya-Sand-Smuggling-17Yr-Old-Dead

 

கிண்ணியா மணல்ஆறு பிர​தேசத்தில் பொலிஸாரின் சுற்றி​வளைப்புக்கு அஞ்சி மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன் இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனத் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

மஹாவலி ஆற்றில் நேற்று (20) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில் தப்பிச்​செல்ல முயன்ற ஐந்து நபர்களில் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு நீரில் மூழ்கிக்  காணாமல் போன இளைஞனே கடற்படையினரின் உதவியுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய 4 நபர்களிடமிருந்து மணல் அகழ்வு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் கிண்ணியா  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(கந்தளாய், கிண்ணியா தினகரன் நிருபர்கள்)

 


Add new comment

Or log in with...