Home » இந்திய பூர்வீக புலம்பெயர் சிறுவர்களுக்கு புலமைப்பரிசில்

இந்திய பூர்வீக புலம்பெயர் சிறுவர்களுக்கு புலமைப்பரிசில்

- 2023 டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்கவும்

by Rizwan Segu Mohideen
November 10, 2023 4:58 pm 0 comment

www.spdcindia.gov.in இற்கு நுழையவும்

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் (SPDC) 2006-2007 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் (PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்களுக்கு (NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

தொழில்சார்ந்த மற்றும் தொழில்முறைசாராத (மருத்துவம்/துணைமருத்துவம் தவிர்ந்த) சகல துறைகளையும் உள்ளடக்கியதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் இந்த புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்களை www.spdcindia.gov.in என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இலங்கையிலுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகள் 2023 டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT