கிரிபத்கொடை வங்கியில் கத்தியை காட்டி கொள்ளை | தினகரன்

கிரிபத்கொடை வங்கியில் கத்தியை காட்டி கொள்ளை

கிரிபத்கொடை வங்கியில் கத்தியை காட்டி கொள்ளை-Kiribathgoda Private Bank Robbery
(வைப்பக படம்)

 

கிரிபத்கொடை தனியார் வங்கியொன்றில் கத்தியைக் காட்டி கொள்ளைச் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (20) பிற்பகல் கிரிபத்கொடை சந்தியிலுள்ள தனியார் வங்கிக்கு வாடிக்கையாளர் போன்று வந்த சந்தேகநபர் ஒருவர், வங்கி கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் பெண் உத்தியோகத்தரிடம் கத்தியைக் காட்டி பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

குறித்த நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர், ரூபா 9 இலட்சத்து 50 ஆயிரம் (ரூபா 950,000) பணத்தை கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...