தோப்பூர் பட்டியடி பகுதியில் மிதிவெடிகள் மீட்பு | தினகரன்

தோப்பூர் பட்டியடி பகுதியில் மிதிவெடிகள் மீட்பு

தோப்பூர் பட்டியடி பகுதியில் மிதிவெடிகள் மீட்பு-Mines Found at Mutur Thoppur


மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பட்டியடி பகுதியில் உள்ள காணியில் இரு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த காணிச் சொந்தக்காரர் ஒருவர் இன்று (22) காலை பெக்கோ இயந்திரம் கொண்டு தனது காணியை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது இரண்டு மிதி வெடிகள் தென்பட்டுள்ளது.

இதையடுத்து இது விடயமாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கபப்பட்டதை அடுத்து, பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று மிதிவெடிகளினை பார்வையிட்டதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட அதிரடிப்படையினரின் அனுமதியுடன் அவற்றை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக காணிச் சொந்தக்காரரிடம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

(தோப்பூர் தினகரன் நிருபர் - எஸ்.எல். நெளபர்)

 


Add new comment

Or log in with...