மண்ணெண்ணெய் கலப்படம்; எரிபொருள் நிலைய உரிமை இரத்து | தினகரன்

மண்ணெண்ணெய் கலப்படம்; எரிபொருள் நிலைய உரிமை இரத்து

மண்ணெண்ணெய் கலப்பட நிலையங்களின் உரிமை இரத்து செய்யப்படும்-Mixing Kerosene With Petrol-License Will Be Cancelled

 

மானியமாக வழங்கப்படும் மண்ணெண்ணெயை சிலர் கலப்படம் செய்ய இடமளிக்கமாட்டோம். ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் மண்ணெண்ணெய் கலப்படம் மேற்கொள்ளும் எரிபொருள் நிலையங்களின் உரிமைப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மண்ணெண்ணெய் கலப்படம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தேன். இதற்கு ஜனாதிபதி சில ஆலோசனைகளை எனக்கு வழங்கிள்ளார். குறிப்பாக சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை சுட்டிக்காட்டி அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மண்ணெண்ணை கலப்படத்தை நிறுத்தவே இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சதவைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மண்ணெண்ணெயை பயன்படுத்துவது சாதாரண ஏழை மக்கள், மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மண்ணெண்ணை விளக்குகளே பயன்படுத்துகின்றன.
மேலும் மீன்பிடி மக்கள் பயன்படுத்தினர் ஆனால் தற்போது டீசல் படகுகளின் வருகையினால் அதுவும் குறைவடைந்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெயை ஒரு லீட்டருக்கு ரூபா 48 நட்டத்தில் விற்கப்படுகின்றது. நாடு மற்றும் அரசு என்ற ரீதியிலேயே நட்டத்தின் மத்தியில் நாங்கள் விநியோகிக்கின்றோம்.

சில முதலாளிகள், வியாபாரிகளின் செயற்பாட்டால் மண்ணெண்னை நுகர்வு அதிகரித்து டீசல் பாவனை குறைந்துள்ளது.

நாங்கள் நடத்திய ஆய்வில் சில எரிபொருள் நிலையங்களில் டீசல் மற்றும் பெற்றோலில் மண்ணெண்ணை கலப்படம் செய்யப்படுகின்றது. வழிநடுவில் பவுசர்களில் மண்ணெண்ணை கலப்படம் இடம்பெருகின்றது.

எங்களது சிறப்பு குழவினால் மண்ணெண்ணெய் கலப்படத்திற்கு காரணமான அதிகமானோரை கண்டுபித்துள்ளளோம். ஆனால் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாகவே சில சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. ஆகவே தான் நாங்கள் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளோம்.

எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்யப்பட்டடால் அந்த எரிபொருள் நிலையத்தின் உரிமம் பத்திரத்தை இரத்துசெய்யவும் அந்த எரிபொருள் நிலையத்ததை சட்டத்திற்கமைய எமது நிறுவனத்தின் கீழ் கொண்டுவரவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

லொரி மற்றும் பஸ்களுக்கு குறிப்பாக சிலர் மண்ணெண்ணை கலந்த டீசலை அல்லது வெறும் மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர். இதனால் பெரிய அளவில் சுற்றாடல் மாசு இடம்பெறுகின்றது.

அமைச்சர் மேலும் கூறுகையில்,

'2014 ஆம் ஆண்டு மண்ணெண்ணெய் விநியோம் கிலோ லீற்றர் 1,38,505 ஆகும். அது
2017 ஆம் ஆண்டில் கிலோ லீற்றர் 1,98,090 ஆக மண்ணெண்ணெய் நுகர்வு உயர்ந்துள்ளது.

ஜனவரியிலிருந்து பெப்ரவரி 28 வரை மண்ணெண்ணை கிலோ லீட்டர் 44,137  விற்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த காலத்தில் தரமற்ற எண்ணெய் கப்பலை கொண்டுவர இருந்தனர். அதனை தடுத்தி நிறுத்தினோம். நாம் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தோம்.

நான் அமைச்சராக இருந்தாலும் பிரதியமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து முக்கிய தீர்மானம் எடுத்தோம்.

இந்த நாட்டில் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வழி அமைக்கமாட்டேன்.

ஆகவே எதிர்காலத்தில் கடுமையான தீமானத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையுள்ளது. ஆகவே நாங்கள் மண்ணெண்ணெய் கலப்படத்தை நிறுத்த எல்லா முயற்சிகளை மேற்கொள்கின்றோம். காரணம் மண்ணெண்ணெய் பாவனை குறையவேண்டிய காலத்தில்தான் அதன் நூகர்வு அதிகரித்துள்ளது. என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...