இலங்கை மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணி பங்குபற்றும் முதலாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 250 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
அந்த வகையில் இன்று (20) தம்புள்ளை, ரங்கிரி விளையாட்டரங்கில் ஆரம்பமான முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அந்த வகையில் பாகிஸ்தான் மகளிர் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்களை பெற்றது. சிறப்பாக ஆடிய 29 வயதான ஜாவிரியா கான் ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் அணியின் தலைவி சமாரி அத்தபத்து மற்றும் சசிகலா சிறிவர்தன தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பாகிஸ்தான் மகளிர் அணி 250/6
ஜாவிரியா கான் 113 (142)
நிதா டார் 34 (43)
சசிகலா சிறிவர்தன 2/40
சமாரி அத்தபத்து 2/48
இலங்கை அணிக்கு 28 வயதான சமாரி அத்தபத்து தலைமை வகிப்பதோடு, பாகிஸ்தான் அணிக்கு 26 வயதான பிஸ்மா மஹ்ரூப் தலைமை வகிக்கிறார்.
Add new comment