பிணை விதி மீறல்; சனத் நிஷாந்த, ஜகத் சமந்தவை கைது செய்ய உத்தரவு | தினகரன்

பிணை விதி மீறல்; சனத் நிஷாந்த, ஜகத் சமந்தவை கைது செய்ய உத்தரவு

பிணை விதி மீறல்; சனத் நிஷாந்த, ஜகத் சமந்தவை கைது செய்ய உத்தரவு-Bail Condition Violoation-Sanath Nishantha Remanded

 

கூட்டு எதிர்க்கட்சி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த ஆகிய இருவரது பிணையும் இரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் குறித்த இருவரதும் பிணையை இரத்து செய்ய, சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி.எஸ். மொராயஸ் இன்று (19) உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் குறித்த இருவரையும் எதிர்வரும் எதிர்வரும் மே 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த இருவரையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.00 மணி முதல் 12 மணி வரைக்குட்பட்ட காலப் சிலாபம் பொலிசில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறு பிணை நிபந்தனையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை மேற்கொள்ளாது தவிர்த்து வந்ததாக, சிலாபம் பொலிசாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

கடந்த 2018 நவம்பர் 24 ஆம் திகதி, அப்போதைய ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளராக இருந்த, தனசேன சுரசிங்கவை தாக்கியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, மிக கொடூரமாக வற்புறுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...