Friday, April 26, 2024
Home » வீதியோர மின்கம்பத்துடன் மோதிய வேன்; 11 பேர் காயம்

வீதியோர மின்கம்பத்துடன் மோதிய வேன்; 11 பேர் காயம்

- சாரதியின் அசமந்த போக்கே விபத்துக்கான காரணம் என சந்தேகம்

by Prashahini
November 10, 2023 11:41 am 0 comment

ஹொரவப்பொத்தானை- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று இன்று (10) காலை விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.

குறித்த வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT