விஜய்க்கு கடும் எதிர்ப்பு | தினகரன்

விஜய்க்கு கடும் எதிர்ப்பு

தமிழ் சினிமாவில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தற்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் முதற்கட்டமாக தயாரிப்பாளர் சங்கம் சினிமா ஸ்ட்ரைக் என்பதை தாண்டி படப்பிடிப்பு கூட நடக்க கூடாது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிற்கிறது, அஜித்தின் விசுவாசம் படத்திற்காக செட் போட்டப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்த நிலையில் விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு விக்டோரியா ஹாலில் தற்போதும் நடந்து வருகிறதாம். எல்லோருக்கும் ஒரு முடிவு என்றால் விஜய் மட்டும் ஏன் அதை கடைபிடிக்கவில்லை என்று பிரபலங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளரான ஜே.கே. சதீஷ் தன்னுடைய டுவிட்டரில், விஜய் படப்பிடிப்பு இன்றும் நடந்து வருகிறது, ஒற்றுமை எங்கே இருக்கிறது. அவருக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி கிடைத்தது, இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.


Add new comment

Or log in with...