ஐ.ம.சு.மு. எம்.பி பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் | தினகரன்

ஐ.ம.சு.மு. எம்.பி பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

ஐ.ம.சு.மு. எம்.பி பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்-Prasanna-Ranaweera-Remanded-Till-March-22

 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு மார்ச் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலின் போது, களனி பிரதேச சபைக்கு சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டிருந்தது.

கிரிபத்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவத்தின்போதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டதையடுத்து, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.


 


Add new comment

Or log in with...