சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்ந்தவர் கைது | தினகரன்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்ந்தவர் கைது

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்ந்த 6 பேரில் ஒருவர் கைது-Hatton Illegal Gem Mining-One Arrested

 

பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 06 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்று (18) மதியம் 2.00 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் நாளை (19) ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், தப்பி சென்ற ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...