ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தில் 15 வருடத்தின் பின் கும்பாபிஷேகம் | தினகரன்

ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தில் 15 வருடத்தின் பின் கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2,000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹாகும்பாபிசேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25.ம் திகதி நடைபெறவுள்ளது.

கடந்த 2015 இன் கடைக்கூற்றில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 15 வருடங்களுக்குப் பிறகு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி  ஆலயநிருவாகம் பிரதமகுருக்கள் சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்களின் ஆலோசனையில் மகா கும்பாபிசேகம் செய்ய திருவருள் கூடியுள்ளது என ஆலய பரிபாலனசபையின் தலைவர் சு.சுரேஸ் செயலாளர் எ.செல்வராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

கும்பாபிசேகத்திற்கான யந்திரபூசைகள் யாவும் மே 5 இல் ஆரம்பாகும். தொடர்ந்து ஜூன் 18இல் கிரியைகள் ஆரம்பமாகும். 23ஆம் 24ஆம் திகதிகளில் எண்ணெய்க்காப்புசாத்தும் நிகழ்வு இடம்பெற்று 25இல் கும்பாபிசேகம் நடைபெறும்.

ஆரம்பத்தில் 23.10.1828ம் திகதி மீனலக்ன சுபவேளையில் குடமுழுக்குப் பெற்றதாக அறியமுடிகிறது. காலந்தோறும் ஆலய திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு புனராவர்த்தன மகா கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியாக 12.06.2003 அ;று நடைபெற்றது.

அதன்பின்பு 15வருடங்களின் பின்பு தற்போது நடைபெற விரிவான ஏற்பாடுகளைச்செய்துவருவதாக ஆலய பரிபாலனசபையின் தலைவர் சு.சுரேஸ் செயலாளர் எ.செல்வராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

புனருத்தாரண வேலையை முன்னெடுக்க 27பேர் கொண்ட தீருப்பணிச்சபையொன்று திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனைக் காப்பாளராகக்கொண்டு அமைக்கப்பட்டது.

ஆகம விதிகளுக்கும் சிற்பவிதிமுறைகளுக்கமைவாகவும் சிற்பங்கள் பொம்மைகள் அமைக்கின்றபணிகளை அனுபவம் வாய்நத சிற்பாச்சாரியார் முருகேசு வினாயகமூர்த்தி லுகன்  ரகு மகேஸ்வரன் மற்றும் வர்ணம் தீட்டுதலில் புகழ்பெற்ற ஓவியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். மூலஸ்தாபன கருவறை பிரகாரக்கோயிலான பிள்ளையார்வெசந்தமண்டபம் நவக்கிரகம் சண்டேசுவரர் ஆலய புனருத்தாரணம் என்பன ஆலய நிருவாகத்தினர் மற்றும் பஞ்சயாத்துசபையினரின் நேரப்பங்களிப்பிலே நடைபெற்றுவருகிறது.

(காரைதீவு குறூப் நிருபர் - சகா)

 


Add new comment

Or log in with...