வழக்கிற்கு ஆஜராகவில்லை; விமல், ஜயந்தவுக்கு பிடியாணை | தினகரன்

வழக்கிற்கு ஆஜராகவில்லை; விமல், ஜயந்தவுக்கு பிடியாணை

வழக்கிற்கு ஆஜராகவில்லை; விமல், ஜயந்தவுக்கு பிடியாணை-Failed to Appear Before Courts

 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மற்றும் அக்கட்சியின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணையாளர், இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வருவதற்கு எதிராக கொழும்பு 7, பௌத்தாலோக்க மாவத்தையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை தொடர்பான வழக்கு விசாரணையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதி முறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்து. குறித்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு விமல் வீரவன்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் சமூகமளிக்காமையினால் அவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...