அவசரக்கால சட்ட நீக்கம்; வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம் | தினகரன்

அவசரக்கால சட்ட நீக்கம்; வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்

அவசரக்கால சட்ட நீக்கம்; வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்-State of Emergency Removed

 

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக் காரணமாக அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, விஜயத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் நேற்று (17) நள்ளிரவு முதல் அவசரக்கால சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. 

கண்டியில் இன வன்முறையை தூண்டும் வகையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, இம்மாதம் 06 ஆம் திகதி அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இது தொடர்பான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2062/50 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி நேற்று (17) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...