டிரம்புடன் தொடர்பு கொண்ட ஆபாச நடிகை மீது வழக்கு | தினகரன்

டிரம்புடன் தொடர்பு கொண்ட ஆபாச நடிகை மீது வழக்கு

சமரசத் தொகையை பெற்றுக்கொண்டு டொனால்ட் டிரம்புடன் வைத்திருந்த பாலியல் தொடர்பை அம்பலப்படுத்திய ஆபாச நடிகையிடம் 20 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு டிரம்பின் வழக்கறிஞர் வழக்கு தொடுத்துள்ளார்.  

ஸ்டோர்மி டானியல் என்ற அந்த ஆபாச நடிகை குறைந்தது 20 தடவைகள் உடன்படிக்கையை மீறி இருப்பதாக அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.  

கடந்த 2006 தொடக்கம் பல மாதங்களாக டிம்புடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக அந்த ஆபாச நடிகை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வாய் திறக்காமல் இருக்க தனது சொந்த பணத்தில் 130,000 டொலர்களை அவருக்கு கொடுத்ததாக ஜனாதிபதியின் வழக்கறிஞர் மைக்கல் கொஹேன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயத்தில் ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக தொடர்புபட்டிருக்கும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. தாம் ஆபாச நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததான குற்றச்சாட்டை அவர் மறுத்து வருகிறார்.     


Add new comment

Or log in with...