Friday, March 29, 2024
Home » அமெரிக்க பசிபிக் சிறப்பு கட்டளை தளபதி பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

அமெரிக்க பசிபிக் சிறப்பு கட்டளை தளபதி பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

by sachintha
November 10, 2023 8:06 am 0 comment

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் நேற்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று ( 09) இச்சந்திப்பு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான உயர் அதிகாரிகளை வரவேற்ற பாதுகாப்பு செயலாளர்,

அவர்களுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இக்கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கிடையிலுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது மற்றும் பயிற்சிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ரியர் அட்மிரல் வில்லியம்ஸ் தளபதியாக பதவியேற்ற பின்னர், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர் சிந்தக்க அபேகோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

(ஸாதிக் ஷிஹான்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT