சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி போட்டிக்கான அணிகள் தேர்வு | தினகரன்

சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி போட்டிக்கான அணிகள் தேர்வு

சம்பியன்ஸ் லீக் காலிறுதியில் லிவர்பூல் – மான்செஸ்டர் சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பார்சிலோனா, ரோமா அணியை எதிர்கொள்கிறது.  
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் சார்பில் ஆண்டுதோறும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடத்துப்பட்டு வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் முன்னணி கழக லீக் தொடரின் முன்னணி அணிகள் பங்கேற்கும். 

2017–18 பருவத்தில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. அதில் யுவான்டஸ் (இத்தாலி), ரியல் மெட்ரிட் (ஸ்பெயின்), செவியா (ஸ்பெயின்), பேயர்ன் முனிச் (ரஷ்யா), லிவரபூல் (இங்கிலாந்து), மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), பார்சிலோனா (ஸ்பெயின்), ரோமா (இத்தாலி) ஆகிய 8 அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றன.
 
காலிறுதியில் யார் யார் உடன் மோதுவது என்பதற்கான குலுக்கல் முறை நடைபெற்றது. இதன்முடிவில் யுவான்டஸ் – ரியல் மெட்ரிட், செவியா – பேயர்ன் முனிச், லிவர்புூல் – மான்செஸ்டர் சிட்டி, பார்சிலோனா – ரோமா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 
காலிறுதி ஆட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டு கட்ட போட்டிகள் முடிவில் அதிக கோல் அடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.    


Add new comment

Or log in with...