பங்களாதேஷ், இந்தியாவை முதல் முறை வெற்றி பெறுமா? | தினகரன்

பங்களாதேஷ், இந்தியாவை முதல் முறை வெற்றி பெறுமா?

 சுதந்திர கிண்ண இறுதிப் போட்டி; இந்தியா களத்தடுப்பு-BANvIND Nidahas Trophy Final-Toss-IND

 

சுதந்திர கிண்ண இறுதிப் போட்டி; இந்தியா களத்தடுப்பு

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெறும், சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (18) கொழும்பு ஆர்.  பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகிறது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குபற்றும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

மாற்றம்
இந்திய அணி
கடந்த போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடிய இந்திய அணியிலிருந்து மொஹமட் சிராஜிற்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட் இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ்
அதே போன்று நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற இலங்கையுடனான போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணி, எவ்வித மாற்றமுமின்றி இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இது வரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, பங்களாதேஷ் அணி ஒரு போட்டியிலேனும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...