'நடிகையர் திலகம்' மே மாதம் வெளியீடு | தினகரன்

'நடிகையர் திலகம்' மே மாதம் வெளியீடு

'நடிகையர் திலகம்' மே மாதம் வெளியீடு-Keerthy Suresh-Nadigayar-Thilagam

 

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படம் மே 9ம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளதாம்.

‘நடிகையர் திலகம்’ சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் எடுக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்க, சமந்தா பத்திரிகையாளர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

 


Add new comment

Or log in with...