கார் மீது துப்பாக்கிச்சூடு; கணவர் பலி; மனைவி படுகாயம் | தினகரன்

கார் மீது துப்பாக்கிச்சூடு; கணவர் பலி; மனைவி படுகாயம்

கார் மீது துப்பாக்கிச்சூடு; கணவர் பலி; மனைவி படுகாயம்-Shooting Husband Death; Wife Injured
(வைப்பக படம்)

 

கொழும்பு மெசெஞ்சர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று (19) காலை 10.15 மணியளவில், கொழும்பு மெசெஞ்சர் வீதியிலுள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத இருவர், கார் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த காரில் ஆண் மற்றும் பெண் இருந்துள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது வாகனத்தை செலுத்தி வந்த சாரதியான  இனசமுத்து அந்தோனிராஜ் எனும் 42 வயதான நபர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரது மனைவி (38) காயமடைந்த நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆமர் வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...