புத்தளம் நகரில் கைவிடப்பட்ட கட்டத்தில் தீ | தினகரன்

புத்தளம் நகரில் கைவிடப்பட்ட கட்டத்தில் தீ

புத்தளம் நகரில் கைவிடப்பட்ட கட்டத்தில் தீ-Fire Broke out in Puttalam Town

புத்தளம் நகர மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பழைய கட்டத்தில் ஏற்பட்ட  தீ விபத்து புத்தளம் பொலிஸார், முப்படையினர், புத்தளம் நகர சபை மற்றும் தீயணைப்பு படையினரால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்து நேற்று (18) இரவு 10.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் நகரில் கைவிடப்பட்ட கட்டத்தில் தீ-Fire Broke out in Puttalam Town

புத்தளம் நகரின் குருநாகல் வீதியில் கடைத் தொகுதிக்குள் காணப்பட்ட புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு சொந்தமான மிக பழைமை வாய்ந்த கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்செயலாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் எவ்வித நாசகார பிற்புல சதிகள் இல்லை என்றும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.  

புத்தளம் நகரில் கைவிடப்பட்ட கட்டத்தில் தீ-Fire Broke out in Puttalam Town

குறித்த கட்டத்தில்  தீப்பற்றிக் கொண்டதும் தீயணைப்பு படையினரோடு பொது மக்களும் இணைந்து செயற்பட்டதால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது.

புத்தளம் நகரில் கைவிடப்பட்ட கட்டத்தில் தீ-Fire Broke out in Puttalam Town

இந்த பழைய கட்டத்துக்கு அருகாமையிலேயே புத்தளம் நகரின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதான வியாபார நிலையங்கள் மற்றும் கடைத் தொகுதிகள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் தினகரன் நிருபர் - எம்.யூ.எம். சனூன்)

Add new comment

Or log in with...