யாழில் 9 மாதத்தில் 1800 கி.கிராம் கேரள கஞ்சா மீட்பு | தினகரன்

யாழில் 9 மாதத்தில் 1800 கி.கிராம் கேரள கஞ்சா மீட்பு

 

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ் மாவட்டத்தில்  1800 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவினருடனான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது இந்நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது சட்டவிரோத மண்கடத்தல் மற்றும் அதீத போதைப்பொருள் பாவனை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் அதிகமான முறைப்பாடுகள் இதன்போது பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் சகலவித நடவடிக்கைகளும் வரும்நாட்களில் முன்னெடுக்கப்படும் என வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்

யாழ் மாவட்ட பொதுமக்களின் உதவியுடன் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கும் பொலிசாருக்குமிடையில் யாழ் பிராந்திய பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இவ்விசேட கலந்துரையாடல் வட பிராந்திய சிவில் பாதுகாப்பு குழுவிற்கான சிரேஸ்ர அத்தியட்சகர் கணேசநாதன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, வடமாகாணத்தில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்த வட மாகாண பிதி பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னாண்டோ இவ்விடயத்தில் பொலிசார் மிகவும் கவனமாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...