ஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை | தினகரன்


ஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 

நேற்று (16) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் மற்றும் மேலதிக வீரர் நூருல் ஹசன் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த இருவருடைய போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக அறவிடப்படவுள்ளதுடன் மறைபுள்ளியும் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

ICC விதிமுறை மட்டம் 1 ஐ மீறியமை தொடர்பில் அவர்கள் இருவருக்கும் தலா ஒரு மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இலங்கையின் 70வது சுதந்திரதின நிமித்தம் நேற்று (16) நடைபெற்ற  ஆறாவது 20 ஓவர் கிரிக்கட் போட்டியின் இறுதி ஓவரில் நடுவரால் நோபோல் (No Ball) சமிக்ஞை செய்யப்படவில்லை என தெரிவித்து குழப்பம் விளைவித்ததுடன் மிக மோசமான முறையிலும் நடந்துகொண்டனர்.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதோடு, நாளை (18) இந்தியாவுடன் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...