இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இலங்கை | தினகரன்

இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இலங்கை

 

போட்டிக்கிடையில் பங்களாதேஷ் வீர்கள் குழப்பம்

இலங்கையின் 70 வது சுதந்திர தினம் நிமித்தம் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்தப்பட்ட இலங்கை- பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆறாவது, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியுள்ளது.

நேற்று (16) நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்ட வாய்ப்பை இலங்கை அணிக்கே வழங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை தனதாக்கிக்கொண்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இதனூடாக பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதுடன் இலங்கையணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.

வெற்றியை கொண்டாடிய பங்களாதேஷ் அணி வீரர்கள் அவர்களுக்காக வழங்கியிருந்த ஓய்வறையின் கண்ணாடிக்கதவுகளை முற்றாக சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 


Add new comment

Or log in with...