Wednesday, April 17, 2024
Home » இராஜாங்க அமைச்சர் டயனாவின் விசாரணை அறிக்கை கையளிப்பு
பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம்

இராஜாங்க அமைச்சர் டயனாவின் விசாரணை அறிக்கை கையளிப்பு

by sachintha
November 10, 2023 6:38 am 0 comment

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்ற குழப்பகரமான சம்பவம் தொடர்பில்

ஆராயவென நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை, எதிர்வரும் திங்கட்கிழமை (13) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவதர்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை வழங்க பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான குழு நேற்று (09) மூன்றாவது முறையாக கூடி இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கு முடிவெடுத்தது.

இதன்படி, சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார திஸாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு சில காலம் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தடை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சில்வாவும் குழு முன் நேற்று ஆஜராகி சாட்சியமளித்தார். பாராளுமன்றத்தின் கீழ் தளத்தில் கடந்த மாதம் (20) இம்மூவருக்கும் இடையில் இந்த குழப்பகரமான சம்பவம் இடம்பெற்றது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT